மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

 மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

 


கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

 

 வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்கப்படும்இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . புதிய வாக்காளர் அட்டை நாளை முதல் 31ஆம் தேதி வரை Voter Help Line மொபைல்என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 


 இதில் வாக்காளர் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து "இ-எபிக்" பதிவிறக்கம் என்ற பட்டனை அழுத்தி வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் 6 என்று பதிவு செய்ய வேண்டும்.


 


இந்த பதிவு செய்த செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் இணையதளம் வாயிலாக தங்களுடைய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தற்போது வாக்காளர் அட்டை பெறுவது மிகவும் எளிமையாக பட்டுள்ளது. ஆதாரத்தை பதிவிறக்கம் செய்வது போல வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது