அரசாணை எண்.148 நாள் 31.10.2018 மற்றும் அதற்கு தெளிவுரையாக வந்த அரசு கடிதம் எண்.784/FR-1/2019நாள் 04.03.2020ம் எல்லா அரசுழியர்களுக்கும் பொருந்துமா ?

 

நன்றி திரு.சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்

தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் அவர்கள் வெளியிட்ட அரசாணை எண்.148 நாள் 31.10.2018 பற்றி

கீழ்கண்ட கருத்துக்கள் தவறுதலாக சொல்லப்படுகின்றது.

CLICK HERE TO DOWNLOAD-G.O 148-DATE-31.10.2018

👉அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் ஆண்டு ஊதிய உயர்வு நாள் வந்தால்,ஓய்வு பெறும்  நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 9வது மாதம் முடிவுற்று 10வது மாதத்திலேயே ஆண்டு ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்என்ற கருத்து தவறுதலாக உலா வருகிறது.

 

        ஆனால் உண்மையில்  அரசாணை எண்.148 நாள் 31.10.2018 மற்றும் அதற்கு தெளிவுரையாக வந்த அரசு கடிதம் எண்.784/FR-1/2019நாள் 04.03.2020ம் எல்லா அரசுழியர்களுக்கும் பொருந்தாது. அவ்வாணைகளை இந்த பதிவுக்கு கீழ் இணைத்துள்ளேன்.

         

             அரசாணை 148ல் கூறப்பட்டுள்ள FR 26ல் உட்பிரிவு 13பத்தி(Ix) ஆனது ஓய்வு பெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது.அதுவும் தன்னுடைய ஊதிய உயர்வுக்குரிய காலாண்டின் முதல் நாளில் பணிபுரிந்தால் மட்டுமே பொருந்தும். அரசாணைக்கு தெளிவுரையாக 04.03.2020ல் வெளிவநத அரசு கடித்தில் கீழ்கண்டவாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது.The above ruling 13(ix) is applicable only for the government servants who have been *promoted on the verge of their retirement.As per this ruling 13(ix)Of fundamental Rules 26(A), Increment of a Government servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and *not in the earliear quarter.

     

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வுகள் 4 காலாண்டுகளாகபிரிக்கப்படுகின்றன .


01) 01.01 to 31.03 - வரை 1வது காலாண்டு  ஆகும். 01.01 to 31.03 வரை நியமனம் /பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அவர்களது வருட ஊதிய உயர்வு நாள் ஜனவரி முதல் நாள்ஆகும்.         

      

2)01.04 to 30.06- வரை 2வது காலாண்டு ஆகும். 01.04 to 30.06 வரை நியமனம் /பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அவர்களது வருட ஊதிய உயர்வு நாள் ஏப்ரல் முதல் நாள் ஆகும். 


 3) 01.07 to 30.09- வரை 3வது காலாண்டு ஆகும். 01.07 to 30.09 வரை நியமனம் /பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அவர்களது வருட ஊதிய உயர்வு நாள் ஜுலை முதல் நாள் ஆகும்.    


 4) 01.10 to 31.12- வரை 4வது காலாண்டு ஆகும். 01.10 to 31.12 வரை நியமனம் /பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அவர்களது வருட ஊதிய உயர்வு நாள் அக்டோபர் முதல் நாள் ஆகும்.


இப்போது அரசாணை எண்.148 நாள் 31.10.2018க்கு தெளிவுரையாக வந்த அரசு கடிதம் எண்.784/FR-1/2019 நாள் 04.03.2020ன் 2ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கத்தை (illustration) பார்த்தால் இவ்வரசாணை ஓயவுபெறும் தருவாயில் பதவிஉயர்வு பெற்று காலாண்டின் முதல் நாளில் பணிபுரிந்திருந்த அரசூழியருக்கு மட்டுமே பொருந்தும் என்ற உண்மை எல்லோருக்கும் நன்கு புலப்படும்.

       

மேற்கண்ட அரசுகடிதத்தின் 2ம் பக்கத்தின் விளக்கத்தில் (Illustration)இருந்து நாம் புரிய வேண்டியவைகள்.

       

1) அன்னார் ஓய்வு பெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்றுள்ளார். அதனால் அரசாணை எண்.148 நாள் 31.10.2018 பொருந்துகின்றது.

          

2) 01.04 to 30.06 வரை பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அவருடைய முதல் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு மட்டும் ஒரு வருடம் தள்ளிப் போகும். அதற்கு அடுத்து வரும் வருட ஊதிய உயர்வு  காலாண்டின் (1.1, 1.4, 1.7, 1.10 என) முதல்நாளுக்கு தானாக வந்து விடும். அரசு கடிதம் எண்.784/FR-1/2019 நாள் 04.03.2020ன் விளக்கத்தில் அவருடைய பதவி உயர்வு நாள் 14.06.2015 ஆகும். அன்னாருக்கு முதல் ஆண்டு ஊதிய உயர்வு வரும் நாள் 14.06.2016 ஆகும். ஆனால் அன்னார் 14.06.2016 க்கு முன்பே 30.04.2016ல் ஓய்வு பெற்று விடுகிறார். எனவே அவருக்கு பதவி உயர்விற்கு பின் வரும்முதல் ஊதிய உயர்வை பெற முடியாமல் போய் விடுகிறது. அவருடைய ஆண்டு ஊதிய உயரவின் காலாண்டுக்குரிய ஏபரல் 1ம் தேதி பணியில் இருந்தும் அவரால் ஆண்டு ஊதியஉயர்வு பெற முடியாமல் போய் விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்குரிய இழப்பை சரி செய்வதற்க்காக மட்டும்  வந்த ஆணைதான் அரசாணை எண்.148 நாள் 31.10.2018 ஆகும்.

         

அரசாணை எண்.148 நாள் 31.10.2018 ஆனது யார் யாருக்கு பொருந்தும்!

1) அரசாணை 148 நாள் 31.10.2018ல் கூறப்பட்டுள்ள FR 26ல் உட்பிரிவு 13பத்தி(Ix) ஆனது     ஓய்வு பெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது.

             

2)பதவிஉயர்வு பெற்றபின் தன்னுடைய ஊதிய உயர்வுக்குரிய காலாண்டின் முதல் நாளில் அன்னார் கண்டிப்பாக பணியில் இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படிபட்டவர்களுக்கு 61 நாட்கள் அதிகபட்சமாக பலன் கிடைக்கும். எனவே எல்லா அரசூழியர்களுக்கும் இந்த சலுகை  கண்டிப்பாக பொருந்தவே பொருந்தாது.