பிஎஸ்என்எல் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த நான்கு புதிய பாரத் ஃபைபர் திட்டங்கள் அனைத்துமே தற்போது பிஎஸ்என்எல் போர்ட்டல்களில் பிரதிபலிக்க துவங்கியுள்ளது. இது அறியாதவர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் நான்கு புதிய பாரத் ஃபைபர் திட்டங்களை ஃபைபர் பேசிக்,ஃபைபர் வேல்யூ, ஃபைபர் பிரீமியம் மற்றும் ஃபைபர் அல்ட்ரா என்கிற பெயரின் கீழ் 90நாட்கள் என்கிற ரீசார்ஜ் செல்லுபடியின் கீழ்,அதாவது விளம்பர அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது இந்த நான்கு புதிய திட்டங்களுமே பிஎஸ்என்எல் போர்டல்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மேலும் இது டிசம்பர் 29,2020 வரை செல்லுபடியாகும் என்பதை பிஎஸ்என்எல் இணையதளங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பின்பு பிஎஸ்என்எல்-ன் நான்கு பிராட்பேண்ட்
திட்டங்களின் விலைகள் ரூ.499, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499-ஆகும் சரியாக அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த 90நாட்களுக்கு மட்டுமே இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டங்கள் பிரபலமடைந்தால் இவைகளின் கிடைக்கும் தன்மை நீட்டிக்கப்படும். ஆனாலும் இந்த பாரத் ஃபைபர் திட்டங்கள் ஆனது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்க உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 100Mbps வேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் டேட்டாவின் வரம்பு முடிந்ததும், வேகம் 2 Mbps ஆக குறைகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் இலவச லேண்ட்லைன் அழைப்பு நன்மையையும் பெறுவார்கள். குறிப்பாக மேலே நாம் பார்த்த பேசிக் திட்டம், இந்த வேல்யூ திட்டம் உட்பட புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்த திட்டங்களுமே நீங்க கால செல்லுபடிகளை வழங்கவில்லை. மாறாக ஒவ்வொரு திட்டத்திற்கும் குறைந்தபட்ச வாடகை காலம் ஒரு மாதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம் பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு பிரீமியம் திட்டம் ஆகும். இதில் பயனர்கள் 200Mbpsவேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டாவை பெறுகிறார்கள். குறிப்பாக டேட்டா வரம்பு முடிந்ததும்,இதன் வேகம் 2 Mbps ஆக குறைகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனமும் இதேபோன்ற திட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம் பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 300 Mbps வேகத்துடன் 4TB (4000GB) டேட்டாவை வழங்குகிறது. இருந்த போதிலும் சில நகரங்களில் அதிகபட்ச வேகம் 200Mbps-உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்ததும், வேகம்4Mbps ஆக குறைகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது. மேலும் இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து விலகினால் அவர்களுக்கான ஒடிடி சந்தாவும் ரத்து செய்யப்படும். மாறாக அவர் நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் 300 மற்றும் சூப்பர்ஸ்டார் 500 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடம்பெயர விரும்பினால் இது நடக்காது.