Inspire Award 6 முதல் 8ம் வகுப்பு வரை விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி செப்டம்பர் 30 (முழு விவரம்)
இன்ஸ்பையர் அவார்டு குறித்து ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற (Webex Meet) நிகழ்நிலை கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்.*
பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை 2008 முதல் இன்ஸ்பையர் விருது வழங்கி வருகிறது.*
*2016 முதல் இந்த விருது புத்தாக்க அறிவியல் ஆய்வு (மானக்) என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.*
*இந்த வருடமும் இன்ஸ்பயர் மானக் விருதுக்கு பதிவுகள் துவங்கிவிட்டது. கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக கூறப்பட்டுள்ளது*
*இந்தமுறை 5 மாணவ / மாணவிகளின் பெயரை பதிவு செய்யலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள எந்த வகுப்பில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஐந்து மாணவர்களின் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வகுப்பில் இத்தனை மாணவர்கள்தான் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு மாணவனின் படைப்பும் தனித்தனியாக இருத்தல் அவசியம்*
*💲📛💲📛2 (அ) 3 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு படைப்பை தர அனுமதி இல்லை. குழு செயல்பாடு இல்லை.*
*💲📛💲அவ்வாறு ஒரே கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொடுத்து பதிவு செய்தால் உங்கள் பதிவு நிராகரிக்கப்படும்*
*இந்த முறையும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு தலா பத்தாயிரம் (10000/_) ரூபாய் வழங்கப்படும்.*
*கடந்த காலங்களில் விண்ணப்பிக்கும் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொகை கொடுக்கப்பட்டது.* *ஆனால் , இந்த முறை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்படும்.*
*அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.* *மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலும், தேசிய அளவிலும், கண்காட்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் படைப்புகள் தொழில் முனைவோரின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இது தொடர்பாக மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று தன் படைப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் ஜப்பான் நாட்டிற்கு நமது மாணவர்கள் சென்று வந்துள்ளனர்.*
*💲📛💲📛💲இன்ஸ்பயர் அவார்டு க்கு படைப்புகளைத் தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்*
Novelty – புதுமையான படைப்புகள்
👉 Social applicability – சமுதாயத்திற்கு பயன்படும் விதமாக, பொருந்தும் விதமாக இருத்தல்
👉 Competitive advantages over existing technologies – தற்சமயம் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்
👉 Cost effectiveness – குறைந்த செலவில் தயாரான படைப்புகள்
👉 User friendliness – கையாள்வதற்கு எளிமையாக இருத்தல்
*👉 Any other speciality வேறு ஏதும் சிறப்பு அம்சங்கள் உடைய படைப்புகள் தவிர்க்கவேண்டிய படைப்புகள்*
👉 மழைநீர் சேகரிப்பு
👉 சூரிய மண்டலம், கோள்கள், பூமியின் இயக்கம்
👉 எரிமலை, மண்சரிவு, நிலநடுக்கம்
👉 மின்சாரம் தயாரித்தல். (காற்றாலை மூலமாக சூரிய சக்தி மூலமாக)
👉 பல்வேறு வகை அலாரங்கள்
👉 மண்புழு உரம் தயாரித்தல்
👉 Vaccum cleaner
👉Hydraulic lift
*👉 Sensor தொடர்பான படைப்புகள்*
*👉 உணவு மாசுபாடு*
*👉 ஒளிச்சேர்க்கை, மிருகக்காட்சிசாலை மாதிரிகள், மூலிகைத்தோட்டம், உணவு சங்கிலி, கார்பன், நீர் சுழற்சி*
*👉 கட்டுரைகள்*
*👉 தானியங்கி தெருவிளக்குகள்*
*👉 மனித உறுப்பு மாதிரிகள்*
*👉 நீர் சுத்திகரிப்பு, தானியங்கி நீர் ஏற்றுதல்*
*மேற்கூறிய தலைப்புகளில் உள்ள படைப்புகள் இருப்பதை தவிர்க்கலாம்.* *இருந்தால் நிராகரிக்க படுவீர்கள்.*
*🌷 முக்கிய குறிப்புகள் 🌷*
*💲📛💲📛பதிவு செய்யும்போது U Dise code* *பயன்படுத்தவும்*
*5 படைப்புகள்/ 5* *மாணவர்கள்*
*ஒரு மாணவனின் படைப்பு மற்ற மாணவனுக்கு பயன்படுத்தவோ, பதிவு செய்யவும் கூடாது*
*💲📛💲சென்ற வருடம் பயன்படுத்திய படைப்புகளை பயன்படுத்தக்கூடாது*
*பதிவு செய்யும்போது audio / video வாக பதிவு செய்யலாம்*
*பதிவு செய்யும் மொழியை தேர்வு செய்து கொள்ளவும்*
*மாணவனின் வங்கிக்கணக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருத்தல் அவசியம். மேலும் வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்த்து பதிவு செய்யவும்,* *மாணவனின் பெயர் வங்கி கணக்கு* *(passbook) புத்தகத்தில் உள்ளது போல் பதிவு செய்தல் மிகவும் அவசியமானதும்* முக்கியம் வாய்ந்ததாகும்
கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தங்களின் username,password ஐ பயன்படுத்தி பதிவு செய்யவும்.
பள்ளிகள் திறந்த பிறகு இன்ஸ்பையர் அவார்டு மாணவர்களை தேர்வு செய்யக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
யோசனை போட்டி நடத்துதல்*
*💲📛💲குழுக்களாக மாணவர்களை பிரித்து எதைப்பற்றி படைப்புகள் செய்யலாம் என்ற யோசனை கேட்கவும்*
*💲📛💲அப்படிப் பெறப்பட்ட யோசனைகளில் புதுமையான ஒரு கருவி , ஏற்கனவே உள்ள கருவியில் ஒரு மேம்பாடு செய்தல், நிகழ்காலத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையும் யோசனைகளை தேர்வு செய்யவும்*
*💲📛💲அனைத்து யோசனைகளையும் சேகரித்த பின்பு தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்*
*💲📛💲கருத்துப்பெட்டி என்ற ஒரு பெட்டியை பள்ளியில் வைத்து மாணவனின் படைப்பு சார்ந்த யோசனையை அதில் எழுதி போட சொல்லவும்*
*💲📛💲அன்றாடம் சுற்றுப் புறத்தில் நிகழும் நிகழ்வுகளை உற்றுப் பார்த்து கவனித்து பிரச்சனைகளை கண்டுபிடிக்க கூறவும்..பிறகு அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க சொல்லவும் இதனால் அருமையான படைப்புகள் உருவாகும்*
CLICK HERE TO APPLY