அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் இந்தாண்டு சேர்க்கை - புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், பணியிடங்களை அதிகரிக்கவும் கல்வியாளர்கள் கோரிக்கை

 

அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் ஆர்வமாக சேரும், ஆங்கில வழி பிரிவுக்கு, பிரத்யேக ஆசிரியர்களோ, வகுப்பறையோ இல்லாத நிலை உள்ளது. ஆங்கில ஆசிரியர்களை நியமித்து, உயர்ந்து வரும் மாணவர் சேர்க்கை வாய்ப்பை, கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களின் தேர்வு, ஆங்கில வழி பிரிவாகவே உள்ளது.

இப்பிரிவை துவக்கினால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என, முன்னாள் முதல்வர் ஜெ., சட்டசபையில் தெரிவித்தார். இதன்படி, 2012 முதல், துவங்கப்பட்ட ஆங்கில வழி பிரிவு, படிப்படியாக அதிகரித்து தற்போது, 90 சதவீத அரசுப்பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இல்லையே!தமிழ் வழியை விட, ஆங்கில வழியில் சேர்க்க, பெற்றோரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். குறைந்தபட்சம் 15 மாணவர்களுக்கு மேல் இருந்தால், பிரத்யேக பிரிவு உருவாக்கலாம். இச்சூழலில், அதிக மாணவர்கள் இப்பிரிவில் சேர்ந்தும், பிரத்யேக ஆசிரியர் நியமிக்க அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், வாரத்திற்கு 28 பாடப்பிரிவுகள் கையாள வேண்டும். கூடுதலாக சில பள்ளிகளில் 35 பாடப்பிரிவுகள் வரை ஒதுக்கப்படுகின்றன.பி.டி.., ஆசிரியர்களுக்கு ஊதியம்இதற்கு மேல், வகுப்பு நடத்த முடியாத சூழலால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 இந்த ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அரசு வழங்குவதில்லை. மாணவர்களிடமோ, தன்னார்வலர்கள் மூலமாகவோ, ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதற்குள், தலைமையாசிரியர்கள் படாதபாடுபட வேண்டியுள்ளது.

 தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''ஆங்கில வழி பிரிவுக்கு, பிரத்யேக கால அட்டவணை தயாரிக்கப்படுகிறது.

 ஆசிரியர்கள் இல்லாமல், இம்மாணவர்களுக்கு எப்படி வகுப்பு கையாள முடியும்? சேர்க்கை இரு மடங்காக உயர்ந்தும், சில பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்படுவதில்லை.

 அந்தந்த ஆண்டுக்கான சேர்க்கை அடிப்படையில், பணியிடங்கள், பணிநிரவல் செய்ய வேண்டும். ஆங்கில வழி பிரிவை, ஆசிரியர் நியமனத்தில் கருத்தில் கொள்வதே இல்லை.பிரத்யேக பிரிவு உள்ள பள்ளிகளில், கூடுதல் பணியிட விபரங்களை திரட்டி, விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், பணியிடங்களை அதிகரிக்கவும், கல்வித்துறை முன்வர வேண்டும்,'' என்றார்.ஆங்கில வழி பிரிவை, ஆசிரியர் நியமனத்தில் கருத்தில் கொள்வதே இல்லை.

பிரத்யேக பிரிவு உள்ள பள்ளிகளில், கூடுதல் பணியிட விபரங்களை திரட்டி, விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், பணியிடங்களை அதிகரிக்கவும், கல்வித்துறை முன்வர வேண்டும்,இது போன்ற வாய்ப்புமீண்டும் கிடைக்காது!மாநிலம் முழுக்க, உபரி ஆசிரியர்கள் கணக்கில் எடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக, பணிநிரவல் செய்யப்பட்டது.

இந்த ஆசிரியர்களை ஆங்கில வழி பிரிவுக்கு நியமித்திருக்கலாம். டெட் தேர்வில் வெற்றி பெற்று, காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு, பணி வாய்ப்பு வழங்கலாம். சேர்க்கை அதிகரித்துள்ள இச்சூழலில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்காவிடில், அரசுப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை, பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஏற்படுத்துவது இயலாத காரியமாகிவிடும் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.