நல்லாசிரியர் விருது வழங்குவதில் மாற்றம்

 

தமிழகத்தில் கொரோனா தொற்றை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் செப்.,5 ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும்.இந்தாண்டு 362 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.


தற்போது கொரோனா தீவிரமடைந்துள்ளதால் ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து விருது வழங்குவது சவாலாக உள்ளது.எனவே தேர்வானவர்களில் 10 ஆசிரியரை மட்டும் சென்னைக்கு அழைத்து அவர்களுக்கு மட்டும் விருது வழங்கவும் மற்றவர்களுக்கு அதே நாளில் மாவட்டங்களில் அமைச்சர், கலெக்டர் மூலம் விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான முடிவை கல்வித்துறை வெளியிடும்.