12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

 வாரராசிபலன், ராசிபலன்

ஞாயிறு முதல் சனி வரை(23.8.2020 - 29.8.2020 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்:

சந்திரன், ராகு நிறைய நன்மைகளை அளிப்பர். ஏற்ற இறக்கங்கள் உள்ள வாரம். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் கூடும். வெறுத்து நின்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் உள்ள ஒருவருக்காக பிரபலமானவரின் உதவியை நாடுவீர்கள். வாடிக்கையாளர்கள் முன்பைவிட அதிகமாக வருவார்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலைச்சல், மன உளைச்சல் வந்து நீங்கும். குடும்ப விஷயங்களில் வெளிமனிதர்கள் தலையிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வழக்குகள் வெற்றிப் பாதையை நோக்கிப் போகும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நலம் காண்பர்.


சந்திராஷ்டமம் :

25.8.2020 மதியம் 1:30 - 27.8.2020 மாலை 4:52 மணி


பரிகாரம் :

கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.


ரிஷபம்:

செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளனர். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு. கணவருக்கு உங்கள் மீது அன்பு கூடுதலாகும். எதிர்பாலினத்து நண்பர்கள் முன் வந்து உதவுவர். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். புத்தசாலித்தனமாக செயல்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிக்க ஆரம்பிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். பணியாளர்கள் கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைஞர்கள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் :

27.8.2020 மாலை 4:53 - 29.8.2020 இரவு 9:53 மணி


பரிகாரம் :

தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.


மிதுனம் :

செவ்வாய், புதன், சந்திரன் சாதகமான அமைப்பில் உள்ளனர். தன்னம்பிக்கை துளிர்விடும். உறவினர்களால் சிறிதளவே நன்மை உண்டு. பெண்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். தன் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவதற்கு முன் யோசிப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கு திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


பரிகாரம் :

ராமர் வழிபாடு வினை தீர்க்கும்.


கடகம்:

சுக்கிரன், ராகு, கேது, சந்திரன் நன்மை செய்யக் காத்திருக்கின்றனர். வெளிநாட்டுத் தொழில் சிறக்கும். குளிர்ச்சியான பிரதேசத்திலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பாலினத்தவரால் நன்மை கிடைக்கும். உங்களின் முயற்சி ஒன்றிற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமுதாயத்தில் உங்களின் புகழ் கூடும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். கலைஞர்கள் புதிய கோணத்தில் யோசித்துப் புகழடைவார்கள். பெண்களுக்கு சிறு குழப்பங்கள் ஏற்படும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் உண்டானாலும் உடனே சரியாகும். மனைவி வகை உறவுகளிடையே மனக்கசப்புக்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.


பரிகாரம் :

அனுமன் வழிபாடு வெற்றி தரும்.


சிம்மம்:

சந்திரன், புதன், ராகுவால் நன்மைகள் கூடுதலாகும். தாயின் ஆதரவுடன் சாதனைகள் செய்வீர்கள். வங்கிக் கடனை அடைப்பீர்கள். உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். கடல் கடந்து வசிப்பவர்கள் சிறு பிரச்னைகளை சந்தித்து மீள்வர். வீட்டிலும், அலுவலகத்திலும் வேலைப்பளு கூடும். பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் இப்போதைக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இயந்திரப் பணியில் உள்ளவர்களுக்கு பல காலம் கழித்து நல்ல வாய்ப்புகள் வரும். வாகனங்களால் சிறு செலவுகள் ஏற்படக்கூடும். கல்வி சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் நன்மையடைவர். வரவேண்டிய பெரிய தொகை கிடைக்கும்.


பரிகாரம் :

சரபேஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


கன்னி:

சந்திரனும், சுக்கிரனும் சாதகமான நிலையில் உள்ளனர். அலுவலகத்தில் இருந்து எதிர்பார்த்த பாராட்டு வரும். புதிய எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் ஆதரவாகப் பேசுவதால் ஆறுதல் கிடைக்கும். கணவரால் நன்மை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வர தாமதமாகலாம். உறவுகளால் சிறு சிறு செலவுகள் ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் சற்றே கவனத்துடன் இருப்பது அவசியம். உடன் பிறந்தவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடல் நலனில் மந்த நிலை இருந்தாலும் நோய் எதுவும் அண்டாது. அநாவசியமாக கற்பனை செய்து வருத்தப்பட வேண்டாம்.


பரிகாரம் :


மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.


துலாம்:

சுக்கிரன், சூரியன், கேது, புதன் அதிர்ஷ்டமான பலன்களை வழங்குவர். பல காலம் தொடர்பில் இல்லாதவர்களிடம் பேசி மகிழ்வீர்கள். கவர்ச்சி அம்சம் காரணமாகப் பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய நட்பு கிடைக்கும். அரசாங்கப் பணிக்கு முயற்சி செய்பவர்கள் ஒரு படி முன்னேறி மகிழ்வீர்கள். புத்திசாலித்தனமான விஷயம் ஒன்றைச் செய்து வியக்க வைப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நற்செய்தி வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். இந்த வாரம் துவங்கும் சில விஷயங்கள் பல வருடங்களுக்கு நீடிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும்.


பரிகாரம் :

பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.


விருச்சிகம்:

செவ்வாய், சூரியன், புதன் கூடுதல் நற்பலன்களை தருவர். நட்பு வட்டம் விரியும். வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதமாகலாம். தேவையான இடத்தில் துணிச்சல் ஏற்படுவதால் தற்காத்துக் கொள்வீர்கள். வலியப்போய் யார் மீதும் வழக்குப் போட வேண்டாம். தெரிந்த மாணவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது பற்றி அவசரம் வேண்டாம்.


பரிகாரம் :

முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


தனுசு:

புதன், சுக்கிரன், செவ்வாய் அனுகூலமாக அமர்ந்துள்ளனர். எதிர்மறை எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணவரவு சிறிது உண்டு. சொந்த பந்தங்களின் ஆதரவான பேச்சு மன வருத்தத்தைத் தீர்க்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு பாசம் காட்டுவார்கள். குடும்ப சொத்து பிரச்னைகள் தீர்வதற்கு நல்ல வழிபிறக்கும். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பாலினத்தினரின் நட்பு கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பப் பெரியவர்கள் மூலம் மருத்துவ செலவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்யும் எண்ணம் மேலோங்கும். சிலருக்கு ராணுவப் பணியில் ஆர்வம் கூடும்.


பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு நலம் தரும்.


மகரம்:

கேது, ராகு, புதன் கூடுதல் நற்பலன்களை தருவர். குடும்பத்தினரை கலந்தாலோசித்து முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். புகழ் பெற்றவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வீர்கள். சமுதாயம் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறிதளவே லாபம் உண்டு. பணியிடத்தில் உங்களின் ஆலோசனை நிராகரிக்கப்படக்கூடும். சற்றும் எதிர்பாராமல் திடீரென்று ஒரு பெரிய விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புதிய வெளிச்சம் தெரியும். பாதியில் நின்ற வேலைகள் முடியும்.


பரிகாரம் :

சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.


கும்பம்:

குரு, சனி, கேது, புதன் நற்பலன் அளிப்பர். நீங்கள் மதிக்கும் நல்லவர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். சாதுார்யமாக செயல்பட்டு பணியிடத்தில் பாராட்டுப் பெறுவீர்கள். புதிய வியாபாரம் தொடங்க இது உகந்த நேரம் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் வருமானம் வரும். புதுமையான எண்ணங்கள் மனதில் தோன்றும். பழைய சம்பவங்களைப் பகிரத்தக்க நண்பர்களைச் சந்திப்பீர்கள். நேரத்திற்கு சாப்பிட முடியாத சூழல் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு தாய்வழி உறவுகளால் இருந்த மனவருத்தங்கள் தீரும்.


சந்திராஷ்டமம் :

23.8.2020 காலை 6:00 - 11:04 மணி


பரிகாரம் :

நவகிரக வழிபாடு சுபிட்சம் தரும்.


மீனம்:


சுக்கிரன், சந்திரனால் நன்மை ஏற்படும். பலரும் போற்றும் வகையில் செயல்படுவீர்கள். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களுக்கு நேரடி எதிர்ப்புகள் வந்து செல்லும். யாரையும் நிரந்தரப் பகைவராக எண்ணி அஞ்ச வேண்டாம். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.


சந்திராஷ்டமம் :

23.8.2020 காலை 11:05 - 25.8.2020 மதியம் 1:29 மணி


பரிகாரம் :

துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.