அரசு கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு.

gallerye_053823735_2578843தெலுங்கானாவில் அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
@@நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டியில், மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மாணவர்கள் மதிய உணவு நேரம் முடிந்ததும் மீண்டும் வகுப்புகளுக்கு வராமல் திரும்பி செல்கின்றனர். இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தபடுவதன் மூலம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் மாநில முழுவதும் அரசு கல்லூரி வளாகங்களில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.