விண்ணப்ப படிவம் கல்லுாரிகளுக்கு தடை

சென்னை : தனியார் கல்லுாரிகளில் விண்ணப்ப படிவத்தை நேரில் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. Latest shortfilm in Tamil - Horror , Thadai Tamil Horror/Thriller Short  Film !! published by Shortfundly | Short film, Thriller, Film


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டதால், கல்லுாரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் பெற, மாணவர்கள் குவிந்துள்ளனர். இதை எதிர்பாராத கல்லுாரிகள், விண்ணப்ப படிவங்களை நகல் எடுத்து, மாணவர்களுக்கு வழங்குகின்றன.தற்போது, பஸ் வசதிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து இல்லாததால், கல்லுாரிகளுக்கு வர, மாணவ - மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால், கூட்டம் கூடுவதற்கும் அனுமதிஇல்லை.இது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.

இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளிலும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்ப படிவங்களை வழங்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.