சென்னை : பிளஸ் 2 மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்தது. இன்று அல்லது நாளை முடிவு வெளியிடப்படஉள்ளது.
மார்ச், 24ல், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்தது. அன்றைய தினம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சில மாணவர்கள் தேர்வை எழுத முடிய வில்லை. அவர்களுக்கு, மறுதேர்வு நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.இதன்படி, நேற்று முன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், 519 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கான விடைத்தாள்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில் வைத்தே திருத்தப்பட்டன. இந்த பணிகள், நேற்று முடிந்து விட்டன. ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணும், தேர்வுத் துறைக்கு, 'இ - மெயில்' வழியாக அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியலுடன், மறுதேர்வு மதிப்பெண் சேர்க்கும் பணி நடக்கிறது. இன்று அல்லது நாளை, தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.