பிளஸ் 2 மறுகூட்டல்

சென்னை : 'பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, பின்னர் தேதி அறிவிக்கப்படும்' என, கல்வித்துறை தெரிவித்து உள்ளது. Class 12 Result 2020 Manipur: CHSE Confirms Manipur Class 12th Result Date


பிளஸ் 2 தேர்வு முடிவு, நேற்று காலையில், திடீரென வெளியிடப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல்போனில், எஸ்.எம்.எஸ்.,சில், மதிப்பெண் விபரம் வெளியானது. இந்நிலையில், தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்வது, மறுமதிப்பீடு செய்வது, விடைத்தாள் நகல் பெறுவது போன்றவற்றுக்கு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.அதேபோல, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், தேர்வு துறை அறிவிக்கும் தேதியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.