ஆந்திராவில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டம்.

ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளின் முழுமையான கட்டமைப்புக்களுக்காக, 'மன பாடி நாடு-நேடு' திட்டம் சில சுவாரஸ்யமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு அனைத்து அரசு \
நிறுவனங்களையும், மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க ஒரு மெகா திட்டத்தை தொடங்கியுள்ளது.
 முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தின் முதன்மை திட்டமான நேற்று - இன்று திட்டத்தின் மூலம், 15,715 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஒன்பது வகையான அடிப்படை வசதிகள் வழங்கப்படுவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, ஓடும் நீருடன் சுத்தமான கழிப்பறை
குடிநீர் விநியோகம்
மின்சார பழுது பார்த்தல்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான பொருட்கள்
பசுமை சாக்போர்ட்
பள்ளிகளில் ஓவியம்
ஆங்கில ஆய்வகம்
கூட்டு சுவர்
பெரிய மற்றும் சிறிய பழுது பார்க்கும் மையம்
 
போன்ற அடிப்படை வசதிகளுடன் அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பாள்ளிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.