கல்விக் கடன் எப்படி வாங்கலாம்? கல்விக் கடன் மறுத்தால் யாரிடம் புகார் செய்வது? (முழுமையான தகவல்கள்)

வேண்டாம்.
முதுகலைக்கும் கடன்!
இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சயம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந்தும்.
இன்ஷூரன்ஸ் அவசியம்!
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முதலில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறுத்தும்.
ஏனெனில், மாணவருக்கு திடீரென்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.
கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?
 
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.
எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந்த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.
யாரிடம் புகார் செய்வது?
''அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழையும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்'' என்கிறவர்கள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச்னையை எடுத்துச் சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு உரிய பதிலை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்னஞ்சல், -மெயில் அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்தலாம். அப்போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம்.
எளிதில் கடன் கிடைக்க..!
கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு- செலவு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வேண்டாம்!