இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து -ஒடிசா

ஒடிசாவில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் தெலங்கானா மாநிங்கள் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பள்ளிகளில் தேர்வு ரத்து 
செய்ததை போன்று கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைக்க முடிவு செய்து உள்ளனர். இதனிடையே ஒடிசா மாநில அரசு கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து ஒடிசா மாநில உயர்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது: கொரோனா தாக்கம் காரணமாக மாநிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.
 Religious violence in Odisha - Wikipedia
யூஜிசி அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி முடிவுகள் அறிவிக்கப்படும்: மாநில உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது