அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடம்?

சென்னை : தமிழகத்தில், மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, அவசர சட்டம் இயற்ற, அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.


வழக்கமாக, தமிழக அமைச்சரவை கூட்டம், தலைமை செயலகத்தின் பழைய கட்டடத்தில், தரை தளத்தில் உள்ள, அமைச்சரவை கூட்ட அரங்கில் நடப்பது வழக்கம்.தற்போது, கொரோனா வைரல் பரவுவதை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றும்படி, அரசு வலியுறுத்தி வருகிறது. எனவே, அமைச்சரவை கூட்டம், நேற்று, தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10வது மாடியில் உள்ள கூட்டரங்கில் நடந்தது.


latest tamil news


முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, முழு ஊரடங்கு அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டது.

latest tamil news


அதேபோல, மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அவசர சட்டம் பிறப்பிக்க, அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. அரசு தரப்பில், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.