வங்கிகள் முழு நேரம் இயங்கும்

சென்னை : வங்கிகள் இன்று முதல், மாலை, 4:00 மணி வரை செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை:வங்கி பணியிடங்களிலும், வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; வங்கிகளின் வேலை நேரமும், மாற்றி அமைக்கப்பட்டது. ஏப்., 14 முதல் தற்போது வரை, மதியம், 2:00 மணி வரை மட்டுமே, வங்கிகள் செயல்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட, திருத்தப்பட்ட வழிமுறைகளில், மாலை, 5:00 மணி வரை, அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதனால், வங்கிகள் இன்று முதல், காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படும். வங்கி கிளைகளில், 50 சதவீத ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றலாம். மீதமுள்ளோர் வீட்டிலிருந்து, மாற்று முறையில் பணியாற்றலாம்.எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என, அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.