வேறு மாவட்டத்திற்கு செல்லும் அனைவரும் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர்: வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
 
அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்
சோதனை உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு
கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு
-தமிழக அரசு அரசாணை வெளியீடு