10ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்படி?

கோபி : ''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி உள்ளவாறு, அட்டவணை அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித் துறையில், பாடப் புத்தகங்கள், நோட்டுகள் தயாரிக்கும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வழங்கும் வகையில், தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ - மாணவியருக்கு வழங்க, ஷூ, சாக்ஸ் மற்றும் புத்தக பைகளும் தயார் நிலையில் உள்ளன. பிளஸ் 1 வகுப்புக்கு, நிலுவை யில் உள்ள ஒரு தேர்வு குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.'நீட்' தேர்வுக்காக, 'ஆன்லைன்' மூலம் பயிற்சி அளிக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை, ஒவ்வொரு பாடத்துக்கும், இடைவெளி உள்ளவாறு, அட்டவணை அமைக்கப்படும்.

வகுப்பில் எவ்வாறு ஆசிரியர் பயிற்சி அளிப்பாரோ, அதே நடையில், 'யு டியூப்' மற்றும் கல்விச் சேனலில், 10ம் வகுப்பினருக்கு கல்வி போதிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினா