பரீட்சை என்பதே இல்லாத அசத்தும் மாற்றுமுறை கல்வி... Home Schooling Concept...

தர்மபுரி அருகே உள்ள நாகர்கூடலில், அழகான மலை பகுதியில் அமைந்துள்ளது புவிதம் கல்வி மையம்...


 
பள்ளியின் நிருவனர் உத்திர பிரதேஷத்தை சேர்ந்த திருமதி ,மீனாட்சியம்மாள். இவர் மும்பையில் மெக்காலே கல்வி பிடிக்காமல் எட்டாம் வகுப்போடு கல்வியை கைவிட்டவர்.
20 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சுட்டு தருமபுரி வந்து மலை அடிவாரத்தில்  காடு வாங்கி செட்டில் ஆயுட்டாங்க. இவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள். அவர்களை பள்ளிக்கு அனுப்ப விருப்பில்லாமல், இவரே கதை வடிவில் நல்ல விசியங்களை சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். ஒரு நாள் ரோட்டுல விளையாடி வந்த பசங்க சிலர், ஏதேச்சையாக அங்க  போயிருக்காங்க... அவுங்க கதை சொல்றத கேட்டு, அந்த குழந்தைக்கு புடிச்சு போயி தினமும் வந்தருக்காங்க. இப்படி தான் பலருக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சு, வீட்டையே பள்ளியாக மாத்தி, நல்ல விசியங்களை சொல்லி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
2002 ல் பள்ளியாக மாற்றி அரசு அனுமதி வாங்கினாங்க..
இங்கு ஐந்தாம் வகுப்பு வரை  பரீட்சை என்பதே இல்லை.
பல நாளா மாற்று வழி கல்வி சாத்தியமா என்று யோசித்த எனக்கு, இவரை பார்த்தவுடன் பல மடங்கு நம்பிக்கை வந்துடுச்சு.
முன்னெல்லாம் காணி புலவனாரை வைத்து விஜயதசமி அன்னைக்கு வித்யாரம்பம் போட்டு திண்னை பள்ளிக்கடத்துல பாடம் சொல்லிகொடுத்தாங்க.
இப்ப அந்த சமுதாயம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பது வருத்தமே..
நான்கு மணி நேரம் பள்ளி குழந்தைகளோடும், மீனாட்சியம்மாளோடும் பேசியதில் கிடைத்த தகவல்கள் மற்றும் எனது  அனுபவங்களையும் சொல்கிறேன்.
புவிதம் பள்ளியில் அன்றாடம் குழந்தைகள் செய்யும் வேலைகளில் சில..
* பள்ளியை சுத்தம் செய்வது,
* சொந்தமா துணி துவைக்கறது,(தங்கி படிப்பவர்கள்)
* சொந்தமா சமைச்சு சாப்பிடறது,
*  நாட்டு மாடு மற்றும் ஆடு மேய்க்க கற்று கொள்வது,
* பால் கறக்க கற்று கொள்வது,
* நெசவு செய்ய கற்று கொடுப்பது,
* துணி தைக்க கற்று கொடுப்பது,
* இயற்கை விவசாயம் செய்ய கத்துக்கறது,
* கட்டிடம் கட்ட கற்று கொள்வது,
* தினமும் செடிகளுக்கு தண்ணி ஊற்றி, மரம் வளர்த்துவது,
* சோப் தயாரிப்பது,
* பேப்பர் Bag தயாரிப்பது,
* காலண்டர் தயாரிப்பது,
* கண்ணாடியில் ஒவியம் வரைவது,
* களிமண் பொம்மை செய்வது,
* தேங்காய் தொட்டி முலம் பொருட்கள் செய்வது,
* மரகட்டைகளில் ஓவியம், பொம்மை செய்வது,
* மரத்தின் மேல் வீடு,
* மூங்கில் ஓவியம்,பொருட்கள்
என்று நீள்கிறது..
இன்னும் பல சுய தொழில்களை கற்று கொள்கிறார்கள்.
மெக்காலே பள்ளி கூடத்தில் படிக்கும் மாணவர்கள் பயத்தோடும், பெரும்பாலும் பயந்தாகோலிகளா தான் இருக்கிறார்கள்.
ஆனால், இங்கு படிக்கும் குழந்தைகள் மிகவும் துடிப்போடும், தைரியமாகவும், சுயமாக சிந்திக்கும் ஆற்றலோடும், எல்லாரிடமும் சகஜமாகவும் பேசுகிறார்கள். ஏன் என்றால்,
இங்க இருக்குற குழந்தைகளை
படி படி என்று கட்டாய படுத்துவதில்லை,
சுயமா சிந்திக்க கத்து கொடுக்க வைக்குறாங்க. அவக்களுக்கு தோனுறப்போ மரத்தடியில் உக்காந்து படிக்குறாங்க, மரம் ஏறுறாங்க, ஜாலியா விளையாடுறாங்க, மொத்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்குறாங்க. இங்க படிக்கற குழந்தைக சரளமா ஆங்கிலமும், இந்தியும் கூட பேசறாங்க.
 
குழந்தைக ரொம்ப ரவசு பண்ணுனா, மிரட்டுவதற்கு மீனாட்சியம்மா சொல்ற வார்த்தை என்ன தெரியுமா ?
நெறய எழுத சொல்லிடுவேன்.
விளையாட விட மாட்டேன்.
டிராமா சொல்லி கொடுக்க மாட்டேன்.
அடுத்த நிமிடம் எல்லாரும் அமைதியா ஆயுடுறாங்க.
அப்புறம் மீனாட்சி அம்மாவை Miss என்றெல்லாம் கூப்பிடமாட்டாங்க,
அக்கா,  Aunty என்றும் Master களை SIR என்று கூப்பிடாமல், அண்ணா என்றும் தான் கூப்பிடுறாங்க. இதுவும் மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து சற்று விலகி ஆறுதல் தரும்படியாக உள்ளது.
SIR என்றால் Slave I Remain என்று அர்த்தம்.
நான்காவது படிக்கும் ஒரு குழந்தையிடம், மூலிகை பத்தி தெரியுமானு கேட்டதற்கு, காய்ச்சலுக்கு வேப்பம் கசாயம், இருமலுக்கு துளசி கசாயம், சளிக்கு கற்பூரவல்லி கசாயம், சொறி செரங்குக்கு வேப்பம் தலையை அரைச்சு பூசனும் என்று சகல வியாதிகளுக்கும் வைத்தியம் சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைத்து செடிகொடிகளின் பெயர்களையும், மூலிகைகளின் பெயரையும் சரளமாக சொல்கிறார்கள். மிரண்டு விட்டேன்.
இந்த வயதில் இப்படி அறிவாற்றாலோடு குழந்தைகளா என்று.
 
சரி இப்படி எல்லாம் நல்லதை சொல்லி கொடுத்தா அரசாங்கமும், அதிகாரிகளும் மற்ற பள்ளிகளும் சும்மா இருப்பார்களா என்ன ?...
ஆம், பல நெருக்கடிகளை கொடுத்துள்ளார்கள்...
அதையெல்லாம் சமாளித்தாலும், ஆறாவதுக்கு மேல் பரீட்சை  வைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆனால், வேடிக்கை என்னவென்றால் 10 மாதம் படிக்க வேண்டிய மெக்காலே பாடத்தை கதை வடிவில் டிராமாவாக வெரும் ரெண்டு, மூணு வாரத்துல அசாலட்டா படிச்சுடுறாங்க அங்கு படிக்கும் மாணவர்கள். தற்போதைக்கு எட்டாவது வரைக்கும் தான் இருக்கிறது. அங்கே படித்து முடித்துவிட்டு வெளிய போயி இரண்டு degree படித்த மாணவனும் உண்டு. மேற்படிப்புக்கு பள்ளி செல்ல விருப்பமில்லையென்றால், 10 ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வு எழுத வேண்டுமானால், அதையும் வீட்டிலிருந்தே படித்து Private ல் எழுதி கொள்ளலாம்.
அதற்கும் Guide பண்ணிருவாங்க..
 
இங்க படிக்குற குழந்தைக, சொந்தமா தொழில் செய்யும் திறனோடு கண்டிப்பா உருவாகிவிடுவாங்கனு தோனுது.
ஆனா,
நான் எல்லாம் இந்த மெக்காலே கல்வியில்  நாலு Degree படிச்சு என்னத்த கிழிச்சோம்னு தான் தோணுச்சு.
தமிழ் மீடியத்தில் சேர்த்தலாம்னு யோசிக்குறவங்க, அங்கும் அதே மெக்காலே கல்வி தான் என்பதை மறக்க வேண்டாம்.
பணம் வேண்டுமானால் மிச்சம் செய்யலாம்.
பெருமைக்கு எருமை மேய்க்க, பக்கத்து வீட்டுக்காரன் பையனை கொண்டு போயி ஊட்டி கான்வென்ட்ல சேத்துனா, நாமளும் கொண்டு போயி சேத்துறது. CBSE, ICSE என்று போட்டி போட்டு கொண்டு எம்புள்ளையும் கச்சேரிக்கு போறான் என்று உழைப்பதை எல்லாம் கல்விக்காகவே பெரும்பகுதியை செலவழித்து, கடன்காரன் ஆகி, அதை அடைக்க, பசங்க பொண்ணுகள எல்லாம் வேலைக்கு அனுப்பி பரதேசிகளா ஒடிக்கிட்டு இருக்குது பலரின் வாழ்க்கை.
இந்த நிலை மாறனும்.
 
இன்னைக்கு கல்வியை வியாபாரமாக்கிட்டாங்க. பள்ளி படிப்பு முடிக்கவே, குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் 30 லட்சம் வரை செலவு செய்கிறோம். பிறகு கல்லூரி செலவு வேறு. இதையெல்லாம் சேமித்தாலே 20 வது வருடத்தில், அவர்களுக்கு ஒரு தொழிலை உருவாக்கி தரலாம்.
புவிதம் பள்ளியின் கல்வி கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
நம்முடைய ஒரு மாத சம்பளத்தில் ஒரு நாள் சம்பளத்தை கொடுத்தால் போதும்.
அதாவது ஒருவர் மாதம் 15 ஆயிரம் சம்பாரித்தால், 500 ரூபாய் கொடுத்தால் போதும். அதிலும் தினமும் அவங்களே Snacks கொடுத்துடுறாங்க.
இதே போல பள்ளி ஆரம்பிக்குறேனு வியாபாரம் ஆக்கிடாதீங்க..
ஏன் சொல்றேனா,
இப்படி தான்  5 வருஷம் முன்னாடி ஈரோட்டில் நாட்டு மாடு, A2 Milk னு கத்த ஆரம்பிச்சாங்க எங்கள் குழுவினர். ஆரம்பத்துல 10 பேர் தான் Meeting க்கு வருவாங்க... அதுலயும் சில பேர் நொரண்டு பேசுவாங்க. நல்லது சொன்னதுக்கு பைத்தியகார கூட்டம் னு பட்டம் தான் கெடச்சது. ஆனாலும், மனம் தளராமல் ஊர் ஊராக நூற்றுகணக்கான இடங்களில் கோ பூஜையும், ஆயிரக்கணக்காணனோரை கூட்டும் அளவுக்கு மாற்றியது. திமில் புத்தகம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதுல வேடிக்கை என்னனா, முன்ன எங்கள திட்டுனவங்க சிலர் நல்ல நாட்டு மாடு இருந்தா சொல்லுங்கனு கேட்டது தான்.
இப்போ, நாட்டுமாடு விலை கிடுகிடுனு ஏறிடுச்சு. சீமை மாட்டு பால் வித்துட்டு இருந்த Amul கூட குஜராத்தில் இன்று A2 Milk விற்க ஆரம்பித்துவிட்டது.
இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா,
நாட்டு மாடு அதிகம் விழிப்புணர்வு அடைந்திருப்பது மகிழ்ச்சி என்றாலும்,
இப்ப நாட்டு மாட்டை வியாபார பொருளா மாத்தி சாதாரண மக்களால் வாங்க முடியாத சூழலை உருவாக்கி விட்டார்கள்.
அதனால் மாற்று வழி கல்வியையும், தயவு செஞ்சு வியாபரம் ஆக்கிராதீங்க...
சாதாரண நடுத்தர குடும்பத்திற்காக தான் இவ்வளவு தூரம் சொல்லிகிட்டு இருக்கேன்.
தனியா உக்காந்து யோசிச்சு பார்த்தா,இந்த மாற்று வழி கல்வி சாத்தியமானு தான் தோணும்.
" ஊர் கூடி இழுத்தால் தான் தேர் கூட நகரும். "
என்பதை நினைவில் கொள்க.
ஐந்தில் வளையாதது,
ஐம்பதில் வளையாது
ஐந்து வயதில் நாம் கற்கும் கல்வி தான் காலத்திற்கும் நிலைத்திருக்கும்.