மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35000 வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

எங்கள் பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35000 வழங்கியுள்ளேன்.
சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தியொன்றில் ஒருவர், என் பிள்ளைக்கு தினமும் தீனி வாங்கித் தருவது வழக்கம். இப்போது வேலைக்குச் செல்ல முடியாததால் கையிலிருந்த பணமும் செலவாகிவிட்டது. என் பிள்ளை கேட்பதை என்னால் வாங்கித் தர முடியவில்லை. கடை இல்லை என்று கூறி சமாளித்து வருகிறேன் என்று கூறினார். இதை கேட்டதும் நம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கூலிவேலைக்குச் செல்வதால் அவர்களுக்கும் இந்நிலைதானே ஏற்பட்டிருக்கும் என்றெண்ணி மாணவர்களின் சிறு தேவையை பூர்த்தி செய்ய இத்தொகையை வழங்கத் திட்டமிட்டேன்.
 
என்னால் அவ்வூருக்கு நேரில் சென்று வழங்க முடியாததால் ( முசிறியிலிருந்து மு.களத்தூர் ) எங்கள் ஊர் அஞ்சலகத்தில் பணிபுரிபவரின்( அவருடைய பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்ப்பதற்காகவே எங்கள் ஊருக்கு குடிபெயர்ந்து வந்தவர் )வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி அனைத்துப் பெற்றோர்களுக்கும் வழங்கச் சொல்லியுள்ளேன்.
- இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர்.