திருக்குறள்
திருக்குறள்:389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
விளக்கம்:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
பழமொழி
we can take
a horse to water but can't
it make it
drink.
தானாக கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால்
கனியுமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி
அதிகம் பேசுவதையும், அமைதி காப்பதையும் விட,
செயற்படுவதே வாழ்வின் முன்னேற்றத்துக்கு வழி.
பொது
அறிவு
1.தங்க நூலிழைப் புரட்சி என்பது எதைக் குறிக்கிறது?
சணல்
உற்பத்தி அதிகரிப்பை குறிக்கிறது.
2.வெள்ளி இழைப் புரட்சி என்பது எதைக் குறிக்கிறது?
பருத்தி உற்பத்தி அதிகரிப்பை குறிக்கிறது.
English
words & meanings
Advice - an
opinion that you give somebody about what they should do. A noun. ஒருவருக்கு வழங்கப் படும் அறிவுரை.
Advise - to tell somebody what you think they
should do. A verb. அறிவுரை வழங்கு.
Amorphous - having no definite shape or
structure. An adjective ஒழுங்கான வடிவமற்ற.
ஆரோக்ய வாழ்வு
கண்
பார்வை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும் .கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
Some
important abbreviations for students
NP - No
Problem
ISO - In
search of
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
ராஜவர்மனின் நேர்மை
குறள் :
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
விளக்கம் :
தன்
உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் துறக்கும் கவரிமானைப் போல, தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்தால் சாண்றோர்கள் தன்னுயிரையே மாய்த்துக் கொள்வார்கள்.
கதை
:
மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான்.
ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான்.
இந்த
சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார்.
இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான்.
நீதி
:
எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும்.
செவ்வாய்
English&Art
இன்றைய செய்திகள்
25.02.20
◆ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மார்ச் 9-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
◆சந்திரயான்-2 தோல்வியால் சூரியனை ஆராயும் 'ஆதித்யா' செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
◆அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். அகமதாபாத் நகரில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
◆ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அசந்தா சரத் கமல்- ஞானசேகரன் சத்யன்ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
◆டி20 உலகக் கோப்பை: 4 சிக்ஸர்கள் அடித்து அசத்திய 16 வயது ,
இந்திய வீராங்கனை
ஷஃபாலி.
◆மகளிர் T20 உலகக்கோப்பை போட்டியில் பங்ளாதேஷை வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.
Today's
Headlines
🌸 The Chennai high court warned the
District Collectors to give detailed report on the precautionary measures taken
to avoid the death of drowning in pond and lakes.
🌸Due to the failure of Chandrayaan-2
the work of "Athithya" which is assigned to do the research on Sun is
delayed said the ISRO's farmer Director Mayilsamy Annadurai.
🌸 American President Donald Trump came
to India for two days visit. Our PM Modi welcomed him in person. In the city of
Ahmedabad a great welcome is given.
🌸In the ITTF World Tour Hungaria Open
Table Tennis held at Hungary for Men's doubles India's Asantha Sarath Kamal -
Gnanasekaran team won the silver medal.
🌸In T-20 World Cricket Indian Player
Shaffali won the match gloriously by four sixers.
Prepared by
Covai women
ICT_போதிமரம்