பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது

சென்னை: பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. தேர்வை முறைகேடின்றி நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 2ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகளை, பள்ளிக்கல்வி துறையும், தேர்வு துறையும் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், எழுத்து தேர்வுக்கு முந்தைய செய்முறை தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. வரும், 13ம் தேதி வரை, ஒவ்வொரு பாட வாரியாக மாணவர்களை பிரித்து, தேர்வு நடத்தப்பட உள்ளது.தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகள் என, தரமான ஆய்வக வசதிகள் உடைய, 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும், புற தேர்வு கண்காணிப்பாளராக பிற பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும், அவருடன், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும், மேற்பார்வை பணியில் ஈடுபட்டுள்ளனர்.செய்முறை தேர்வில் பதற்றமின்றி, அறிவியல் செயல்முறைகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேற்பார்வை பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவ - மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். ஆனால், தவறுக்கு துணை போய்விடக்கூடாது என்பது போன்ற, அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன.தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய, புற தேர்வு கண்காணிப்பாளர் சரியான நேரத்தில் வருகிறாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.செ

ய்முறை தேர்வுகளில் அதிக மதிப்பெண் வழங்க, மாணவர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில், கண்காணிப்பாளர்களுக்கு சிறப்பு கவனிப்புகள் நடக்கிறதா என்பதையும் கண்காணிக்குமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அதிகாரிகளும், பள்ளிகளில் நேரடி கள ஆய்வு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்