குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து

சென்னை:நாடு முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம், இன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில், 5 வயதுக்கு உட்பட்ட, 70.50 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.இதற்காக, மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடிகள் என, 43 ஆயிரத்து, 51 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.போலியோ சொட்டு மருந்து முகாம், இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கி, இடைவெளியின்றி மாலை, 5:00 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
தொலைதுாரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்க, 1,000 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளில், அங்கன்வாடி மற்றும் ஆசிரியர்கள் என, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.விடுபட்ட குழந்தைகளை கண்டறிய, போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கு, இடது கை சுண்டு விரலில், மை வைக்கப்படும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்