சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி, 6 முதல், 13 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிகளில், விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு அனுமதியான, 'தத்கல்' திட்டத்தின் கீழ், ஆன்லைனில், ஜன., 20, 21ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள தனி தேர்வர்கள், அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அரசு தேர்வு சேவை மையங்களின் விவரங்களை, http://www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.