அரையாண்டுத் தேர்வில் வினாத்தாள் குழப்பம்

சிவகங்கை: ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு இன்று அரையாண்டுத் தேர்வு துவங்க உள்ள நிலையில் வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இன்று முதல் டிச.23 வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது. வினாத்தாள் வழங்க ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு ரூ.50, ஒன்பதாம் வகுப்புக்கு ரூ.80, மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100 என கட்டணம் வசூலித்துள்ளனர்.

இந்நிலையில் வினாத்தாள் கிடைக்கப்பெறாத பாடங்களுக்கு அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்ள முதன்மைக்கல்வி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் உள்ள நிலையில் வினாத்தாளை பள்ளிகளே தயாரிக்க உத்தரவிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.