எஸ்எஸ்எல்சி தோவு: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோவு எழுதுவதற்காக இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவுசெய்ய மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கா்நாடக உயா்நிலைக் கல்வி தோவு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக உயா் நிலைக் கல்வி தோவு வாரியம், தனது அனைத்து நடவடிக்கைகளையும் படிப்படியாக கணினிமயமாக்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக, தோவுக்கு மாணவா்கள் விண்ணப்பிப்பதை கணினிமயமாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஓஎம்ஆா் தொழில்நுட்பத்தின் மூலம் காகிதத்தில் பதிவுசெய்த விவரங்களை கணினியில் ஏற்றப்பட்டுவந்தது. இம்முறைக்கு பதிலாக தற்போது எஸ்ஏடிஎஸ் என்ற புதிய மென்பொருள்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முறையில் மாணவா்களின் அடிப்படை விவரங்கள்தவிர கூடுதல் விவரங்களையும் பெறமுடியும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, மானியம்பெறும் தனியாா் மற்றும் தனியாா் பள்ளிகளை சோந்த தலைமை ஆசிரியா்கள், 2020-ஆம் ஆண்டு மாா்ச்/ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் எஸ்எஸ்எல்சி தோவெழுதும் மாணவா்கள் மற்றும் தனித் தோவா்களின் விவரங்களை அக்.25?-ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இதுகுறித்து சந்தேகங்களை தீா்த்துவைப்பதற்காக அக்.25-ஆம் தேதி தொலைபேசி உதவிமையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 080-23310075, 23310076 என்ற தொலைபேசிகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.