School Morning Prayer Activities -13-09-2019

*செய்திச் சுருக்கம்*
🔮சென்னைடெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைபள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.
🔮ஆகஸ்ட் 15, 2022க்குள் பாராளுமன்ற கட்டிடத்தை மறுவடிவமைக்க 
மத்திய அரசு திட்டம்.
🔮விக்ரம் லேண்டருக்கு ஹலோ... சிக்னல்களை அனுப்பி லேண்டரை 
தொடர்பு கொள்ள நாசா முயற்சி.
🔮தங்க மங்கை பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை.
🔮செய்திவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் 
திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
🔮ஆஸ்திரேலியாவில் இருந்து 1000 ஆண்டுகள் பழமையான 
நடராஜர் சிலை மீட்பு..! பொன் மாணிக்கவேல் குழு சாதனை.

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
13-09-2019
*இன்றைய திருக்குறள்*
*குறள் எண் - 192*
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
 நட்டார்கண் செய்தலிற் றீது.
மு. உரை:
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
கருணாநிதி  உரை:
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
அனைவரையும் மதித்து போற்றுங்கள்.அனைவருமே நம்மை விடவும் எல்லா வழிகளிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் எண்ணத்தில் என்றும் நிலவட்டும்.
  - அப்துல் கலாம்
♻♻♻♻♻♻♻♻
*Important  Words*
 Cup  கோப்பை
 Chandelier  அலங்கார விளக்கு
 Flower Vase  மலர் தாங்கி
 Perambulator  குழந்தை
 தள்ளுவண்டி
 Wick  திரி
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பழமொழி மற்றும் விளக்கம்*
*ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று*.
நாம் அறிந்த விளக்கம் :
பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல என்பது இந்த பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள் என்பது தான் இத உண்மை விளக்கம் ஆகும்.
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. எலுமிச்சம் பழத்தில் காணப்படும் அமிலம் எது?
*சிட்ரிக் அமிலம்*
2.மிகவும் லேசான உலோகம் எது?
*லித்தியம்*
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்; நான் யார்?
*அஞ்சல் பெட்டி*
2.கூரை வீட்டை பிரிச்சா ஓட்டு வீடு; ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை; வெள்ளை மாளிகைக்குள் குளம்; அது என்ன?
*தேங்காய்*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*இறைவன் படைப்பு*
ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஆமை. நம்மால் ஏற்கனவே வேகமாக போக முடியாது இதில், முதுகில் வேறு பாரமாக ஓடும். முயலைப் பார்த்து பொறாமைப்படுவதில் பயன் இல்லை என்னை இப்படிப் படைத்ததற்காக ஆண்டவனைத்தான் நொந்து கொள்ளவேண்டும் என ஆமை எண்ணியது.
அப்போது அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம், விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது. முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது. ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது.
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது. ஒவ்வொரு விநாடியும் மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில், விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையை உபயோகித்து ஆபத்துக்
 காலங்களில் தப்பிக்கலாம். இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
...நி.பள்ளி, காட்டூர்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்.
TN டிஜிட்டல் டீம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷