தரமில்லாமல் 18 மருந்துகள்

சென்னை:'சந்தையில் விற்பனை செய்யப்படும் 18 வகையான மருந்துகள் தரமற்றவை' என மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

அனைத்து வகையான மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஜூலையில் 988 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 970 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், குடற்புழு நீக்கம், வாயு, அமில பிரச்னை, கிருமித்தொற்று, வயிற்றுப்புண்ணுக்கான 18 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
அதன் விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து தர கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.