செப்., 1 முதல் பள்ளிகளில் துாய்மை பணிகள்

சென்னை:மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், செப்., 1 முதல், 15 வரை துாய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், வரும், 1ம் தேதி முதல், துாய்மைப் பணிகளை துவக்க, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் அறிவித்துள்ளது.இதன்படி, பள்ளி வளாகங்களில் தேங்கிக் கிடக்கும் பழைய பொருட்கள், பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், மாணவர்கள் பேரணியாக சென்று, துாய்மை இந்தியா திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.