Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 11, 2019

School Morning Prayer Activities - 11.07.2019

*செய்திச் சுருக்கம்*
🔮அத்திவரதரை தரிசனம் செய்ய வருகிற 12ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வருகை.
🔮ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது.
🔮உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்துள்ளார்.
🔮பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் , யுனெஸ்கோ.
🔮ஜூலை 14 முதல் 17 வரை தமிழகத்துக்கு மழை வாய்ப்புதமிழ்நாடு வெதர்மேன்
🔮ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றியின் விளம்பிற்கு வந்த இந்தியா இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகப் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது.
*இன்றைய திருக்குறள்*
 *வான்சிறப்பு*
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
*மு. உரை*:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
*சாலமன் பாப்பையா உரை*:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே
*கலைஞர் உரை*:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
 
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
 அனைத்து நட்புக்கு பின்னாலும் ஒரு சுயநலம் உள்ளது. சுயநலங்கள் இல்லாத நட்பு இல்லை.
இது ஒரு மிக கசப்பான உண்மை.
 - சாணக்யா.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important  Used Words*
 Disease  நோய்
 Dengue  டெங்கு காய்ச்சல்
 Tall  உயரமான
 Influenza  குளிர் ஜுரம்
 Smallpox  பெரியம்மை
🍀🌿☘🍀🌿☘🍀🌿
*உடல் நலம்*
*பாலாசனம்*
பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1.இந்திய ஏவுகணையின் தந்தை?
*அப்துல் கலாம்*
2.கணித அறிவியலின் தந்தை?
*பிதாகரஸ்*
3.தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
*சென்னை*
4.பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
*சென்னை*
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
*Articles Usage*
*Indefinite Article – ‘A’*
‘A’ is used:
Before a word which begins with a consonant.
Example:
A woman
Before a singular, countable noun
Example:
A banana
When we mention something for the first time
Example:
I saw a dog
Before a word with a long sound of ‘u’
Example:
a university, a uniform, a useful book,a European
Before the word one
Example:
a one-way street, a one-eyed man, a one-year course, a one-day holiday, etc.
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் தமிழ்*
*இரட்டை மேற்கோள் குறி (“”)*
தன்கூற்றை வலியுறுத்த, தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர்கூற்றைக் கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் குறி இடவேண்டும்🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*புதிர் கதை*
*மரண தண்டனை விதி*
 மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனுக்கு அதனை நிறைவேற்ற மூன்று முறைகளில் ஏதேனும் முறை ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டது. முதலாவது தூக்குத் தண்டனை
இரண்டாவது விஷ ஊசி ஏற்றப்படுதல்
மூன்றாவது மூன்று வருடம் உணவு கொடுக்கப்படாத சிங்கத்தின் கூண்டினுல் இடுதல்.
இவற்றில் எம்முறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவன் மரண்தண்டனையிலிருந்து விடுபடலாம்.
*விடை*:
 மூன்றாவது முறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவன் மரண்தண்டனையிலிருந்து விடுபடலாம். ஏனெனில் மூன்று வருடம் உணவு கொடுக்கப்படாத சிங்கம் எப்போதோ இறந்திருக்கும்.
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

☘🌿🍀☘🌿🍀☘🌿
*தொகுப்பு*
T.தென்னரசு,
.ஆசிரியர்,
தமிழ்நாடு டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment