முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்

முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஸ்மார்ட் போனில், அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர்.இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை இணைந்து, தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வை நடத்தி வருகின்றன. 

நேற்று நாடு முழுவதும் இந்த தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கஞ்சனுார் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், அந்த பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
அதே பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும், 25 மாணவர்கள் முதன் முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மாவட்டத்திலேயே கஞ்சனுார் அரசுப்பள்ளி மாணவர்கள், முதன்முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதி உள்ளனர். இதில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் பரிசு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.