பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தத் தடை: டிஜிபி உத்தரவு


சென்னை: பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது கஜா புயல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளில் ஊடகங்களோ அல்லது சமூங்க ஆர்வலர்களோ செல்ல இயலாத பகுதிகளில் கூட முதலாவதாக சென்று பணியில் இருப்பவர்கள் காவல்துறையினைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆனால் அவ்வாறு பணியில் ஈடுட்டிருப்பவர்கள் அதிக அளவு நேரத்தினை தங்களது செல்போனில் வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் நேரம் செலவிடுவதாக பரவலாக புகார்கள் தமிழக அரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் சமீப காலங்களில் வந்து
சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் பாதுகாப்பு பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துணை காவல் ஆய்வாளர் பணிநிலைக்கு மேலாக உள்ள அதிகாரிகள் மட்டுமே இனி செல்போன் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.