கோவை, பாலிடெக்னிக் கல்லுாரி தேர்வில், பறக்கும் படை உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த ரத்து அதிகாரம், திரும்ப பெறப்பட்டுள்ளது.மாநிலம்
முழுவதும், 700க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன.
இக்கல்லுாரி
மாணவர்களுக்கான முதல் கட்ட செய்முறை தேர்வுகள், 22ம் தேதி வரை நடந்தன. தற்போது, எழுத்து தேர்வுகள் நடந்து வருகின்றன.இத்தேர்வு பணிகளை கண்காணிக்க, இணை இயக்குனர்கள் தலைமையில், கல்லுாரி முதல்வர்களை உறுப்பினர்களாக கொண்ட, பறக்கும் படை அமைப்பது வழக்கம். முறைகேடு கண்டறியப்பட்டால், தேர்வுகளை ரத்து செய்ய, பறக்கும் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.கடந்தாண்டு மட்டும், இதுபோன்று முறைகேடு புகார் காரணமாக, 58 கல்லுாரிகளில் செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது நடந்து வரும் பருவத்தேர்வுகள் முதல், பறக்கும் படை உறுப்பினர்களின் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம், பறிக்கப்பட்டுஉள்ளது.தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக, புகார் அறிக்கையை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தொழில்நுட்ப கல்வி இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 'பறக்கும் படை உறுப்பினர்கள், முறைகேடுகளை கண்டறிந்தால், உரிய கமிட்டிக்கு புகார்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, முறைகேடு செய்பவர்களுக்கே சாதகமாக இருக்கும்' என்றார்