மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியின்றி பள்ளிகளில் 'சர்வே'க்கு தடை

பள்ளி கல்வித் துறை அனுமதியின்றி, தனியார் நிறுவனங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி திறன், குடும்ப பின்னணி, கல்வி கட்டணம், மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம், உள்கட்டமைப்பு வசதி குறித்து, பல தனியார் அமைப்புகள், பள்ளிகளில், 'சர்வே' எடுக்கின்றன.


அந்த ஆய்வுகளை, தவறாக பயன்படுத்துவதாகவும், புகார்கள் வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக,சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியின்றி, எந்த அமைப்பும், ஆய்வு மேற்கொள்ள கூடாது என, கூறப்பட்டுள்ளது.