டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை முறை - 'ஜூஸ் ஃபாஸ்டிங்'

தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

ஏடீஸ் வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவி மனிதர்களைத் தாக்குகிறது. தமிழக அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏடீஸ் வகை கொசுக்களின் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் நல்ல பலனைக் கொடுக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழக அரசே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இயற்கை மருத்துவரான (நேச்சுரோபதி) விஷ்ணு விக்னேஷ்வரன் (BNYS, MD, DNHS, DAT, MHS (Adl, Hel Edu), DMT, PhD), டெங்கு காய்ச்சலுக்கு 'ஜூஸ் ஃபாஸ்டிங்' என்ற சிகிச்சை முறையை ஒரு நல்ல தீர்வாகச் சொல்கிறார்.
ஏடீஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு வைரசால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தூங்க முடியாத அளவுக்குத் தலைவலி, மூட்டு வலி, உடல் வலி, தொடர் வாந்தி, கண்ணுக்குப் பின் வலி போன்றவை இதன் அறிகுறிகள். உடலில் சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றினால் டெங்கு பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்றவை டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.
ஆனாலும், டெங்கு காய்ச்சல் வந்தால் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம் என்று சித்த மருத்துவர்களும், தமிழக அரசும் வலியுறுத்தி வருகின்றன. அப்படி நிலவேம்பு கஷாயம் குடிப்பதாக இருந்தால், நிலவேம்பு வேர் கஷாயமே சிறந்தது.

இது, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
அதே நேரத்தில், நேச்சுரோபதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறந்து தீர்வு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவதாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஆகவே, எங்கள் ஆராய்ச்சியின் மூலம், இயற்கையாகவே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று தோன்றியது. அதாவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ஸைம்களையும் (மல்ட்டி என்ஸைம்), தாதுகளையும் (மல்ட்டி மினரல்ஸ்) செயற்கையான முறையில் கொடுக்க வேண்டும்.

அதற்கு, 200 மில்லி சூடான சாத்துக்குடி ஜூஸுடன் 25 கிராம் எலக்ட்ரால் கலந்து, ஒன்றரை மணி நேர இடைவெளியில் தினமும் எட்டு முறை குடிக்க வேண்டும். இடையில் வேறு எந்த உணவையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. வேண்டுமானால், இரண்டு அல்லது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். இந்தச் சிகிச்சை முறைக்கு ஜூஸ் ஃபாஸ்டிங் என்று பெயர்.

குறைந்தது தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டால், நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி கிட்டத்தட்ட 86 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கிறது. இந்தச் சிகிச்சையால் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு அல்லாமல், நம் உடலில் நுழைந்த டெங்கு வைரசும் வெளியேற்றப்படுகிறது என்பதுதான் இந்தச் சிகிச்சையின் பலன்.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்து (ஆன்ட்டிபயாடிக்) இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால், எங்கள் ஆய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ள இந்த ஜூஸ் ஃபாஸ்டிங் சிகிச்சை, டெங்கு காய்ச்சலுக்கு நிச்சயமான ஒரு தீர்வாக இருக்கும் என்றார் டாக்டர் விஷ்ணு விக்னேஷ்வரன்.
டாக்டர் விஷ்ணு விக்னேஷ்வரன் தொடர்புக்கு - 044-22440299, 9344420000.