முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக கேரளாவில் புதிய அருங்காட்சியகம் நாளை திறப்பு


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக கேரளாவில்
அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகம் நாளை திறக்கப்பட உள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கிறார்.
மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கே.சிவன் மற்றும் கேரளா சட்ட சபையின் துணை சபாநாயகர் வி.சசி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

இதுகுறித்து டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஜு டேவிட் அல்ஃபி கூறும்போது, 'முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் வாழ்க்கையை பின்பற்றுவதன் மூலம் இளைஞர் சமுதாயம் வாழ்வில் சாதிக்க முடியும் என்ற உணர்வை இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்தும்' என கூறியுள்ளார்.