CBSE 12 ஆம் வகுப்பு தேர்வில் 'பெரும் குளறுபடி' - மாணவ மாணவிகள் 'கடும் அதிர்ச்சி'!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்..-யின் 12-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் மிகப்பெரிய குளறுபடிகள்
நடந்துள்ளன. இதனால், தேர்வு எழுதி மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12-ம் வகுப்பு
 சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி நாடுமுழுவதும் வௌியாகின. தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு முடிவுகள்வந்துவுடன் மறுகூட்டல் மற்றும் மறு மதிபீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், சி.பி.எஸ்.. தேர்வு முறையில் மறுகூட்டல் மட்டுமே செய்ய முடியும், மறுமதிப்பீடு என்பது நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றபின் செய்யலாம்.
கூடுதல் மதிப்பெண்
இந்நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய டெல்லியை சேர்ந்த சோனாலி என்ற மாணவி பொருளாதாரம் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், கணக்குப்பதிவியிலில் 95 , பிசினஸ் ஸ்டடியில் 96 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ஆனால், அவருக்கு கணித பாடத்தில் நன்றாக தேர்வு எழுதியும், அவருக்கு  68 மார்க் மட்டுமே கிடைத்திருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த சோனாலி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதில், கணித பாடத்தில் 95 மார்க் கிடைத்தது. அதாவது ஏற்கனவே எடுத்திருந்த மார்க்கை விட 27 மார்க் அதிகரித்து இருந்தது.
மறுகூட்டலில் கூடுதல்
அதேபோல் டெல்லியை சேர்ந்த சமிக்ஷா சர்மா என்ற மாணவி கணிதம் பாடத்தில் 42 மார்க் எடுத்திருந்தார். அவரும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதில் அவருக்கு 90 மார்க் கிடைத்தது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு மாணவர் பொருளாதாரம் பாடத்தில் 9 மார்க் பெற்று பெயிலாகி இருந்தார். அவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 45 மார்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.
அதிர்ச்சி
இதே போல் பல மாணவ, மாணவிகள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து அதிகான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பொதுவாக மார்க் குறைந்து மறுகூட்டல் நடக்கும் போது ஒன்றிரண்டு மதிப்பெண்கள் வித்தியாசம் வரலாம். ஆனால், 40 அல்லது 50 மார்க் வரை வித்தியாசம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிர்ச்சி
இந்த குளறுபடியால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. மறுகூட்டலுக்கு விண்ணப் பித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகி இருக்கிறது. பலர் சரியான மதிப்பெண் கிடைத்து இருக்கிறது  என்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் நிலைமை கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
பதில் இல்லை
ஆனால், இதுகுறித்து சி.பி.எஸ்.. கல்வி வாரியத்தை தொடர்பு கொண்டு நிருபர்கள் கேட்டபோது, அதற்கு முறையக பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
முடிவு வாபஸ்

தனியார் சி.பி.எஸ்.. பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் அசோக் பாண்டே கூறுகையில், “ தேர்வு தாள்களை மறுகூட்டலுக்கு அனுமதித்து, மறுதிருத்தத்துக்கு அனுமதி அளிக்காதது மிகப்பெரிய தவறாகும். இது மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அந்த முடிவை கைவிட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.