பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் மார்ச் 19,26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் மார்ச் 19,26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் இன்றும் (மார்ச் 19) வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம் போல் இயங்கும்.
இந்த இரு நாட்களிலும் லேண்ட்லைன், பிராட்பேண்ட்,எப்டிடிஹெச் மற்றும் சிம் கார்டு விற்பனைகள் நடைபெறுவதோடு, வாடிக்கையாளர்கள் தொலைபேசி கட்டணங்களையும் செலுத்தலாம்.
முன்னதாக பல்வேறு காரணங்களுக்காக லேண்ட்லைன், பிராட்பேண்ட்,எப்டிடிஹெச் இணைப்பைத் துண்டித்தவர்கள் மறுஇணைப்பு பெறுவதற்கும் அதனைப் பொருத்துவதற்குமானக் கட்டணங்கள் தள்ளுபடிச் செய்யப்படுகிறது.
கூடுதலாக பிஎஸ்என்எல் ப்ஃரீபெய்டு சிம் கார்டுகள் மார்ச் 15 முதல் 2017 ஆம் ஆண்டு ஜூன் 14 தேதி வரை இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.