டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி

புது தில்லி: பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் போல, வங்கிகளில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5000 வரை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்ய முடியும். டிசம்பர் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களின் மூலமாக, கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம், கருப்புப் பணம் தனிநபர் மற்றும் போலி வங்கிக் கணக்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.