'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும்
மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.
பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு
அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில்,
தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு
பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும்.
விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட
வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை
பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள்,
என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.