'டிஜிட்டல்' நூலகத்தில் 30 லட்சம் கட்டுரைகள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய, 'டிஜிட்டல்' நுாலகத்தில், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளதாக, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தக ஆவணங்களை சேகரித்து, அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில், மத்திய அரசு சார்பில் டிஜிட்டல் நுாலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நுாலகத்தை, கான்பூரில் உள்ள இந்திய
உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., நிர்வகித்து வருகிறது. தற்போது, இந்த டிஜிட்டல் நுாலகத்தில், ஒரு லட்சம் ஆய்வாளர்களின், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. இதுபோல், அனைத்து மாநில உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து மற்றவர்கள் பயன்பெறச் செய்யுமாறு, பல்கலை மற்றும் கல்லுாரிகளை, யு.ஜி.சி., கேட்டுக் கொண்டுள்ளது.