வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி நிறுத்தம்

புதுடில்லி: சில நாட்களுக்கு முன் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து,
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.