டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு
துறைகளிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு, பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் - 1, 1ஏ, 2, குரூப் - 4 என, குரூப் - 8 வரையிலான, படிநிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பதவிகள் என்ன; தேர்வுகள் நடக்கும் முறை என்ன; தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் மற்றும் பட்டதாரிகளின், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பதவிகள், துறைகள் மற்றும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவரங்களை, http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.