வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை?

இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை
இங்கிலாந்தில் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான புதிய சட்டத்தை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து இந்த கடுமையான சட்டத்தை கொண்டுவர உள்ளதாகவும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.