ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.


              இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை ஆணையர் கூறியுள்ளார். மேலும், அதிக விலைக்கு விற்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தொழிலாளர் துறை ஆய்வர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 30 ஊர்களில் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும், அந்தந்த ஊர் ஆய்வர்களின் செல்போன் எண்களையும் ஆணையர் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:
1. சென்னை 1வது வட்டம் 94453 98738
2. சென்னை 2வது வட்டம் 94453 98739
3. சென்னை 3வது வட்டம் 94453 98740
4. காஞ்சிபுரம் 94453 98743
5. திருவள்ளூர் 94453 98745
6. கடலூர் 94453 98746
7. வேலூர் 94453 98741
8. விழுப்புரம் 94453 98747
9. திருவண்ணாமலை 94453 98742
10. திருச்சி 94453 98756
11. தஞ்சை 94453 98757
12. திருவாரூர் 94453 98758
13. பெரம்பலூர் 94453 98759
14. திண்டுக்கல் 94453 98760
15. கரூர் 94453 98754
16. தேனி 94453 98762
17. மதுரை 94453 98761
18. விருதுநகர் 94453 98763
19. சிவகங்கை 94453 98767
20. ராமநாதபுரம் 94453 98764
21. திருநெல்வேலி 94453 98768
22. தூத்துக்குடி 94453 98769
23. நாகர்கோவில் 94453 98771
24. கோவை 94453 98752
25. திருப்பூர் 94453 98772
26. கிருஷ்ணகிரி 94453 98748
27. குன்னூர் 94453 98753
28. சேலம் 94453 98749
29. ஈரோடு 94453 98751

30. நாமக்கல் 94453 98750