சித்த மருத்துவம் படிக்க ஆர்வம் இதுவரை 4,400 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்தியமருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்கள்; 21 சுய நிதி கல்லுாரிகளில், 1,143 இடங்கள் உள்ளன.இதற்கான
விண்ணப்ப வினியோகம், ஜூன், 29ல் துவக்கியது. இதுவரை, 4,400 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, மொத்தம், 3,800 விண்ணப்பங்களே வந்தன.விண்ணப்பிக்க வரும், 31ம் தேதி கடைசி நாள் என்பதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.