தட்கல் முன்பதிவில் விதிமுறை தளர்வு: செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டை எண் அல்லது அடையாள அட்டை நகல் வழங்க தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
         தற்போது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஓட்டு
நர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.இதனால் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவதாக கருத்து வலுத்து வந்த நிலையில்ரயில்வே நிர்வாகம் விதிமுறையை தளர்த்தியுள்ளது. ஆயினும் பயணம் செய்யும் போது பயணிகள் கண்டிப்பாக அசல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.