பள்ளி விடுதிகள் மற்றும்
கேன்டீன்களில் நுாடுல்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை
பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பலவற்றில் கேன்டீன் உள்ளது. இவற்றில் மதிய நேர உடனடி உணவாக, மேகி நுாடுல்ஸ் விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான உத்தரவு பள்ளிக் கல்வித் துறை செயலகத்திலிருந்து பிறப்பிக்கப்படும்.