அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில்
பகிர செய்கீரிர்களா? அப்படி எனில் ஆசிரியர் நண்பர்களே உஷார்...
மற்ற புகைப்படங்களையும் அப்லோட் செய்வதற்கு கல்வி துறை தடை செய்ய உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரிவு உபசார விழாவினை பள்ளியில் கொண்டாடியுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து அம்மாணவிகள் மினி பீர்
அடிப்பது போன்று புகைப்படங்களை உருவாக்கி அதனை முகநுாலில் சில ஆசிரியர்கள்
பரவ விட்டுள்ளனர்
இதனை கல்விதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் இந்த நிகழ்வுக்கு காரணமாணவர்களை தண்டிக்க அரசு தயாராகி வருகிறது.
மேலும் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் சார்ந்த விவரங்களை முகநுாலிலோ அல்லது
வேறு முறையிலோ பகிரப்படுவது சட்டபடி குற்றம் எனவும் மீறுவோரை பணி நீக்கம்
செய்யவும் அரசு தயாராகி வருகிறது
இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களை வேறு முறையில் பயன்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட அந்த பள்ளி மாணவிகளின் புகைப்படத்தை நம் முகநுால் அன்பர்கள்
யாராவது எங்கிருந்தாவது பார்த்து உங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தாலோ
அல்லது ஷேர் செய்து இருந்தாலோ உடனடியாக அகற்றவும்.
இனி கவனத்துடன் செயலாற்ற அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.