சென்னை:பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடக்கிறது.
ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் விதமாக, பி.எட்., - எம்.எட்.,
படிப்புகளுக்கான கால அளவை, ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக உயர்த்தி, ஆசிரியர் கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தனியார் கல்வியியல் கல்லுாரி நிர்வாகங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், புதிய பாடத்திட்டம் வகுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில், நாளை முதல் இரு நாட்கள் நடக்கிறது. இதில், என்.சி.டி.இ., சார்பில், சந்தோஷ் பாண்டா பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.